லகிலுள்ள அனைத்து உயிர்களும் சூரிய ஒளியைப் பெற்றே இயங்குகின்றன. சூரியன் பகலின் நாயகன் என்றால், சூரியனின் ஒளியைப் பெற்று இரவில் குளுமையைத் தரும் நாயகி சந்திரன். ஒரு உயிரை ஜனிக்கச்செய்வது சூரிய ஒளி என்றால், உயிரைத் தாங்கும் உடல் சந்திரன். ஜோதிடரீதியாக லக்னம் உயிர் என்றால் ராசி உடலாகும். ஜாதகத்தில் ஜாதகர் உயிர், ஆன்மா சூரியன் என்றால் உடல், மனம் சந்திரனாகும்.

Advertisment

சூரிய, சந்திரர்களின் இயக்கமே ஜோதிடம் என்றால் மிகையா காது. நவகிரகங்களின் இயக்கம் உண்மை என்பதை உணர்த்தும் இயற்கையின் அரசி சந்திரனைப் பற்றி சில பயன்தரும் ஜோதிடத் தகவல்களைக் காணலாம்.

மனோகாரகனான சந்திரன் நவகிரகங்களில் இரண்டாம் இடத்தை வகிப்பவர். சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தைச் சுற்றிவர 27 நாட்களாகிறது. சந்திரன் மனோகாரகன் என்பதாலும், அதன் இயக்கம் விரைவாக இருப்பதாலும், சந்திரனின் இயக்கத்திற் கேற்ப மனிதர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே ஜென்ம நட்சத்திரமாகும். சந்திரன் நிற்கும் ராசி ஜென்ம ராசி யாகும். ஜனன ஜாதகத்தில் சந்திரன் பலம்பெற்றிருந்தால் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசுவழியில் ஆதரவு உண்டாகும்.

Advertisment

சந்திரன் மனோகாரகன் என்பதால், அவர் பலமிழந்திருந்தால் மனக்குழப்பம், மனநோய், மற்றவர்களிடம் ஒத்துப்போக முடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை போன்றவை ஏற்படும்.

ஒருவருடைய ஜாதகத்தில் வளர்பிறைச் சந்திரன் சுபராகவும், தேய்பிறைச் சந்திரன் பாவியாகவும் விளங்குகிறார். வளர்பிறைச் சந்திரன் கேந்திர, திரிகோணத்திலோ, 2, 11-லோ அமைந்து தசை நடைபெற்றால் நற்பலன்கள் உண்டாகும். சந்திரன் ராகு, கேது சேர்க்கைப் பெற்று அமைவது கிரகண தோஷமாகும். கிரகண தோஷம் ஏற்பட்டு தசை நடைபெற்றால் மனக்குழப்பம், மனசஞ்சலம், தாய்க்கு கண்டம் ஆகியவை உண்டாகும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் லக்னத்திற்கு 3, 6, 8, 12-ல் மறையக்கூடாது. மூன்றாமிடம் என்னும் தைரிய, வீரிய, ஜெய ஸ்தானத்தில் சந்திரன் இருந்தால் தைரியக் குறைவையும், வீரிய இழப்பையும், வெற்றி பாதிப்பையும் தரும். 6-ஆம் இடம் என்னும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் இருந்தால் கடன், நோய்த் தொல்லை அதிகமாகும். ஆயுள், வம்பு, வழக்கைக் குறிக்கும் எட்டாமிடத்தில் சந்திரன் இருப்பது மனக்கலக் கத்தையும், வம்பு வழக்கையும் தரும். விரய ஸ்தானமான பன்னிரண்டில் சந்திரனிருந்தால் கட்டுக்கடங்காத விரயம் இருக்கும்.

Advertisment

சந்திரன் தினக்கோள் என்பதால், வேகமாகச் சுற்றி ஒரு மாதத்தில் 12 ராசிகளைக் கடந்துவிடும். இவ்வாறு கடக் கும்போது, தினமும் சந்திரன் இருக்கும் இடத்தைப் பொருத்து மனிதர்களின் மனநிலை மாறு வதுடன், லாப நஷ்டங்கள், நிறை குறைகள், சிந்தனை, கோப தாபம், உற்சாகம், வீண் அலைச்சல், பயணங்கள், காதல், காமம் போன்ற பலன்கள் ஏற்படும்.

ஜனன ராசியிலிருந்து கோட்சாரத்தில் ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் சஞ்சாரம் செய்யும்போது ஏற்படும் பலன்களைக் காணலாம்.

சந்திரன் ஜென்ம ராசியில் இருக்கும்போது மனசஞ்சலம், மிகுந்த சிந்தனை போன்றவை இருக்கும். ஞாபக மறதி உண்டாகலாம்.

ராசிக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் இருக்கும் போது பணவரவு அதிகரிக்கும். நகைச்சுவை உணர்வு, கற்பனை சக்தி அதிகரிக்கும். இனிப் பான, குளிர்ச்சியான உணவு சாப்பிட ஆர்வம் ஏற்படும்.

ராசிக்கு மூன்றில் சந்திரன் வரும்போது சகோதர ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வீரமும் விவேக மும், சிறுதூரப் பயணமும் ஏற்படும்.

ராசிக்கு நான்காம் இடத் தில் சந்திரன் வரும்போது மனமகிழ்ச்சி, தாய்வழி ஆதரவு, உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

ராசிக்கு ஐந்தாம் இடத் திற்கு சந்திரன் வரும்போது நல்ல எண்ணங்கள், ஆன்மிகப் பயணங்கள், தெய்வபக்தி, தெளிந்த மனம், தாய்மாமன் ஆதரவு கிடைக்கும்.

ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும்போது எரிச்சல், டென்ஷன், கோபம், மறதி, வீண்செலவுகள், அலைச்சல், உடல்உபாதைகள் இருக்கும்.

ராசிக்கு 7 ல் சந்திரன் இருக்கும்போது உற்சாகம், நண்பர்கள் சேர்க்கை, சுற்றுலா, கேளிக்கை, விருந்து ஆகிய நற்பலன் மிகும்.

ராசிக்கு 8-ல் சந்திரன் இருக்கும் நாள் சந்திராஷ்டமமாகும். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் செய்யலாம். கொடுக்கல்- வாங்கல், விவாதங்களைத் தவிர்ப்பது அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது.

ராசிக்கு 9-ல் சந்திரன் வரும்போது பயணங்கள், பணவரவு, ஆன்மிக நாட்டம், ஆலய தரிசனம், காரியசித்தி, நல்ல தகவல், குதூகலம், ஆலய தரிசனம் போன்ற சுபப்பலன்கள் மிகுதியாகும்.

ராசிக்கு 10-ல் சந்திரன் வரும்போது தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். முன்னோர்களால் ஏற்பட்ட பாவங்களைத் தீர்க்க சிறந்த நாள்.

ராசிக்கு 11-ல் சந்திரன் வரும்போது தொட்டது துலங்கும். தொழில் லாபம், பொருள் சேர்க்கை, தரும சிந்தனை, அமைதியான மனம் போன்ற பலன்கள் ஏற்படும்.

ராசிக்கு 12-ல் சந்திரன் வரும்போது அலைச்சல், டென்ஷன், கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள், செலவுகள் மிகும்.

சந்திரனால் உண்டாகும் யோகங்கள் பல இருந்தாலும், சில குறிப்பிட்ட யோகங்கள் நடைமுறையில் சுப, அசுபப் பலன் தருகிறது.

chandraprofit

கஜகேசரி யோகம்

சந்திரனின் கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10-ல் குரு இருந்தால் அதை கஜகேசரியோகம் என்பார்கள். கஜம் என்றால் யானை. கேசரி என்றால் சிங்கம். சிங்கத்தைக்கண்ட யானைபோல் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் எல்லாம் விலகும்.

குருச்சந்திர யோகம்

குருவும், சந்திரனும் இணைந்தாலோ, சமசப்தமமாய்ப் பார்த்துக்கொண்டாலோ அது குருச்சந்திர யோகமாகும். இதன்காரணமாக பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

புனர்பூ தோஷம்

சந்திரன், சனியுடன் சேர்க்கை, பார்வை புனர்பூ எனப்படும்.

மனமெனும் சந்திரன், கர்மாவெனும் சனியின் பிடியிலிருப்பதால் காரியத் தடை, தொழில் இழப்பு, மனம் ஒன்றுபடாத நிலை ஆகிய பலன் உருவாகும். மனமும் உடலும் எதை விரும்பு கிறதோ, அதைப் பெறுவதில் தடை, தாமதம் இருக்கும்.

அமாவாசை யோகம்

சந்திரன், சூரியனுடன் இணைவது அமாவாசை யோகம். ஆன்மாவுடன் மனம் இணையும். சொல்லும் செயலும் ஒன்றுபடும். மனதும் ஆன்மாவும் இணைந்தவர்கள் உலகப் புகழ்பெற்று கவிதை, காவியம் எழுதி அசத்துவார்கள்.

கிரகண தோஷம்

சூரியன், ராகு, சந்திரன், கேது இடையில் பூமி வந்தால் சந்திரன் மறைபடும். இதில் சூரியன், சந்திரன் இணைந்தால் சூரிய கிரகணமாகும். சூரியனும், சந்திரனும் சம சப்தமாக இருந்தால் சந்திர கிரகணமாகும். கிரகண தோஷம் சிரமம் நிறைந்த வாழ்க்கையைத் தரும். சந்திரனும் கேதுவும் சேர்ந்தவர் வாழ்வில் துயரமான நிகழ்வுகள் அதிகமாக இருக்கும்.

சந்திர மங்கள யோகம்

சந்திரனுக்கு 1, 4, 7, 10-ல் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகம் எனப்படும். இதனால் வீடு, வாகனம், செல்வம், செல்வாக்கு உண்டாகும்.

சந்திரனின் இயக்கமே அன்றாட நிகழ்வைத் தீர்மானம் செய்வதால், சந்திரன் இருக்கும் நட்சத் திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடு கிறோம், திருமணப் பொருத்தம் பார்க்கிறோம். கோட்சாரப் பலன் பார்க்கிறோம். ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சந்திர பலன், தாரா பலன் மிகுந்த நாட்களில் செய்யும் செயல்களில், நன்மை பலமடங்கு அதிகரிக்கும். அதாவது கோட்சார சந்திரன் ராசிக்கு 2, 5, 7, 9, 10, 11-ல் வரும்போது, அந்த நட்சத்திரத்தின் தாராபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சி களுடன் அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

சந்திர தசை பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் ஒரு ராசியில் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிக்கிறார். ராசி மண்டலத்தைச் சுற்றிவர 27 நாட்களாகிறது. சூரியன், சந்திரன் ஆகிய இருவரும் இணைந்திருக்கும் நாளை அமா வாசை என்கிறோம். சூரியனுக்கு 7-ல் சந்திரன் சஞ்சரிக்கும் நாளைப் பௌர்ணமி என்கிறோம்.

சூரியன் இருக்கும் இடம்முதல் 7-ஆம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களை வளர்பிறை என்கிறோம். 7-ஆம் வீடுமுதல் 12-ஆம் வீடுவரை சந்திரன் சஞ்சரிக்கும் நாட்களைத் தேய்பிறை என்கிறோம். இந்த இடைவெளி நாட்களைக் கொண்டுதான் திதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் உண்டாகிறது .சந்திரனின் பலத்தைக்கொண்டுதான் திருமண முகூர்த்தங்களும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

சந்திரனால் உண்டாகக்கூடிய நோய்கள்

தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், குடல் புண், முகப்பரு, தைரியக் கு றைவு, நீரினால் கண்டம், நீர்வாழ் விலங் குகளால் கண்டம், ரத்தத்தில் தூய்மையில்லாத நிலை, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் சந்திரனால் ஏற்படும்.

பலர் தங்களது ஜென்ம நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களைப் பார்க்காததால், பல முயற்சிகள் தோல்வி அடைகின்றன. நற்செயல் களை நல்ல நாள், நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும். அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில், முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கிக் கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சி களைத் தொடங்கலாம்.

உங்கள் நட்சத்திரத்திற்கு நன்மை தரும் நட்சத்திரங்கள் அஸ்வினி: பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி.

பரணி: கிருத்திகை, மிருகசீரிஷம், புனர் பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.

கிருத்திகை: ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி.

ரோகிணி: மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி. மிருகசீரிஷம்: திருவாதிரை, பூசம், அஸ்வினி, கிருத்திகை, சுவாதி, அனுஷம், மகம், உத்திரம், சதயம், உத்திரட்டாதி, மூலம்.

திருவாதிரை: புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி.

புனர்பூசம்: பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம்.

பூசம்: ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை.

ஆயில்யம்: மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

மகம்: பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம். பூரம்: உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம்.

உத்திரம்: அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.

அஸ்தம்: சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருக சீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம்.

சித்திரை: சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம்.

சுவாதி: விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம்.

விசாகம்: அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை.

அனுஷம்: கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி.

கேட்டை: மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம்.

மூலம்: பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம்.

பூராடம்: உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை.

உத்திராடம்: திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவா திரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம்.

திருவோணம்: அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம்.

அவிட்டம்: சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம் சதயம்: பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம்.

பூரட்டாதி: உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம்.

உத்திரட்டாதி: ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம்.

ரேவதி: அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி.

அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களுக்கு சாதகமான நட்சத்திரத்தன்று செய்யும் அனைத்து செயல்களும் ஜெயமாகும். சந்திரன் பலம்குறைந்து, தன் தசையையோ, புக்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில் கெடுபலன்கள் நடக்கத் துவங்கும். மேலும், சந்திரனுடன் இணைந்த கிரகங்களின் தசா, புக்தியிலும் இந்த பலன்களைச் செய்யும். அதனால், சந்திரன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் கீழுள்ள எளிய பரிகாரத்தைச் செய்வது நல்லது. சந்திரன் வலுவாக உள்ளவர்களும் இந்தப் பரிகாரத்தைச் செய்தால் சந்திரபலம் கூடும்.

● திங்கட்கிழமைதோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும்.

● பச்சரிசி மாவில் மாவிளக்கு செய்து, பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்றவேண்டும்.

● நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம்செய்ய வேண்டும்.

● திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதமிருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்கவேண்டும்.

● வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

● வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

● திருப்பதி சென்று வேங்கடாசலபதியை தரிசிக்கவேண்டும்.

● திங்களூர் சென்று வழிபாடுசெய்ய வேண்டும்.

● பௌர்ணமியில் சத்ய நாராயணர் விரதமிருக்க வேண்டும்.

செல்: 98652 20406